மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

4 நாள்கள் தொடர் விடுமுறை: உதகை-மேட்டுப்பாளையம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மகாவீர் ஜயந்தி,  புனித வெள்ளி ஆகிய தினங்களையொட்டி 4 நாள்கள் தொடர் விடுமுறை வருவதால், உதகை- மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 3:10 am

மகாவீர் ஜயந்தி,  புனித வெள்ளி ஆகிய தினங்களையொட்டி 4 நாள்கள் தொடர் விடுமுறை வருவதால், உதகை- மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:
வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து  4 நாள்கள் விடுமுறை என்பதால், வெளியூர்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அதிகப்படியான வாகனங்களால் ஏற்படும் நெருக்கடியைக் கருதி,  சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாகவே அனுமதிக்கப்படும்.  உதகையிலிருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே  அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் பர்லியாறு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. இதற்கு லாரி ஓட்டுநர்கள்,  வாகன ஓட்டுநர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இருப்பினும்,  அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வழக்கமான வழித் தடங்களில் அனுமதிக்கப்படும். போக்குவரத்து மாற்றங்கள் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு 
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.