ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டாஸ்மாக் வளாகத்தினுள் புகுந்த காட்டெருமை! உதகையில்  பரபரப்பு

உதகையில் நகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை வளாகத்தினுள் புகுந்த காட்டெருமையை அங்கிருந்து   விரட்ட வனத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:47 pm

உதகையில் நகரப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை வளாகத்தினுள் புகுந்த காட்டெருமையை அங்கிருந்து   விரட்ட வனத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உதகை, கமர்ஷியல் சாலையிலுள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை வளாகத்தினுள் தனியாக மதுக்கூடம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தினுள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வழிதவறி வந்த  ஒரு காட்டெருமை புகுந்துள்ளது. 
காட்டெருமையின் வருகை  திங்கள்கிழமை அதிகாலையில் டாஸ்மாக் மதுக்கூட  ஊழியர்களுக்குத் தெரியவந்தது. உடனே வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  வனத் துறையினர் உடனே அங்கு விரைந்து வந்து அப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்தனர்.  
அருகிலிருந்த பள்ளி வளாகத்திலிருந்தும் மாணவ, மாணவியர்  வெளி வராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு  அச்சாலை  பாதுகாப்பு  வளையத்தினுள் கொண்டு வரப்பட்டது.
அந்தக் காட்டெருமையை பகலில் விரட்டுவது குறித்து வனத் துறையினர் ஆலோசித்தனர்.  
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் பகல் நேரத்தில் காட்டெருமையை விரட்ட முடியாது எனவும்,  மாலை 5 மணிக்குப் பின்னர் காட்டெருமையை விரட்டலாமெனவும்  தீர்மானிக்கப்பட்டது. 
பிற்பகலில் அந்த காட்டெருமைக்குத் தண்ணீர் கொடுக்கப்பட்டது.  தண்ணீரைக் குடித்தவுடன் அது படுத்துவிட்டது. இரவு 7 மணி வரையிலும் அந்தக் காட்டெருமையை விரட்ட முடியவில்லை.  இரவு 9 மணிக்கு மேல் அதை விரட்ட வனத் துறையினர் தீர்மானித்தபோது, அது மீண்டும் படுத்துவிட்டது. 
இரவு 11 மணிக்கு டாஸ்மாக் வளாக கதவு திறக்கப் பட்டவுடன் வெளியேறிய காட்டெருமை ரோஜா பூங்கா அருகில் உள்ள குடியிருப்பில் நுழைந்துவிட்டது. அங்கிருந்து அதனை விரட்டும் பணியில் காவல் துறையினரும், வனத் துறையினரும்  ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.