மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நீலகிரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: புதிதாக  6 வாக்குச் சாவடிகள்

நீலகிரி மாவட்டத்திலுள்ள  உதகமண்டலம், கூடலூர் (தனி) , குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை வெளியிட்டார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:16 am

நீலகிரி மாவட்டத்திலுள்ள  உதகமண்டலம், கூடலூர் (தனி) , குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை வெளியிட்டார்.
 இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
 நீலகிரி மாவட்டத்தில் 1.1.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்கும் அதாவது 31.12.2000க்கு முன்னர் பிறந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்குதல்,  பிழைத் திருத்தங்கள், முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பார்கள். தற்போது, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இம்மாதம் 8, 22ஆம் தேதிகள், அக்டோபர் 6, 13ஆம் தேதிகள் என நான்கு நாள்கள் ( சனிக்கிழமைதோறும்) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள், இருப்பிட நலச் சங்க கூட்டங்கள் நடைபெறும். 
இதில்,  தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.
  மேலும்,  இம்மாதம் 9ஆம்தேதி,  23ஆம் தேதி, அக்டோபர் 7ஆம் தேதி, 14ஆம் தேதி என நான்கு நாள்கள் ( ஞாயிற்றுக்கிழமைதோறும்) வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.  உதகமண்டலம் சட்டப் பேரவைத்  தொகுதிக்கு உள்பட்ட ( பாகம் எண் 84ல் எச்)பி.எப் குடியிருப்புப் பகுதியில் இருந்த 584 வாக்காளர்களின் பெயர் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் அவ்விடத்தில் குடியிருக்காததால் உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றி அவர்கள் அனைவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவ்வாக்காளர்கள் தற்போது எங்கு குடியிருக்கிறார்களோ அவ்விடத்தில் அதற்குரிய பாகத்தில் உரிய ஆதாரங்களுடன் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
    நீலகிரி மாவட்டத்தில் 6 வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் ஆடாசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வண்டிசோலை  திரு இருதய ஆண்டவர் பேராலய நடுநிலைப் பள்ளி மற்றும்  நொண்டிமேடு புனித தாமஸ் நர்சரி பள்ளி,  கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் கொன்னச்சால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கொன்னச்சால் அரசு மேநிலைப் பள்ளி, மரப்பாலம் பாண்டியார் அரசு மேல்நிலைப் பள்ளிஆகியவை புதிய வாக்குச் சாவடி  மையங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.