
கூடலூரில் பிளாஸ்டிக் பொருள்கள் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாகக் கூறி வணிகர்கள் திடீர் கடையடைப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து கூடலூரில் அனைத்து பகுதியிலுள்ள கடைகளிலும் வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டி அல்லாத கவர்கள் மற்றும் இதர பொருள்களையும் பறிமுதல் செய்தது மட்டுமின்றி தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக வணிகர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதிகாரிகளின் இந்த சோதனை நடவடிக்கையை கண்டித்தும்,பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், வியாபாரிகள் வியாழக்கிழமை மதியம் கடைகளை அடைத்து ஊர்வலம் சென்றனர்.
கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், பிளாஸ்டிக் சோதனை என்ற பெயரில் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும்,
மாற்று ஏற்பாடு செய்யும் வரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






