இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதில்  கோத்தகிரி விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி பகுதியில் மலைக் காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

கோத்தகிரி பகுதியில் மலைக் காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைக் காய்கறிகள் சாகுபடிக்கு ரசாயன உரத்தைப் பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரசாயன உரங்களின் விலை உயர்வு, அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மகசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறி வருகின்றனர்.
சமீபகாலமாக, கோழிக் கழிவு உரம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அன்னூர் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் கோழிக்கழிவு போன்ற இயற்கை உரத்துக்கான செலவு ரசாயன உரங்களுக்கு ஏற்படும் செலவைவிட குறைவாக இருப்பதாகவும்,  மகசூல் அதிகமாகக் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அன்னூரில்  40 கிலோ எடை கொண்ட கோழிக் கழிவு உர மூட்டை விலை ரூ. 90க்கு கிடைக்கிறது. போக்குவரத்து செலவுடன் மூட்டைக்கு ரூ. 150 ரூபாய் மட்டுமே செலவாகிறது. இதனால், இயற்கை உரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.