மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கேரளத்துக்கு நீலகிரி மாவட்ட மக்கள் ரூ. 38 லட்சம் நிவாரண நிதி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் சார்பில் ரூ.38 லட்சம்  நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக

Published On :

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் சார்பில் ரூ.38 லட்சம்  நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட்  திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம், பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள்,  தனி நபர்களால் மனிதநேயத்துடன்  நிவாரணப் பொருள்கள், நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.19,14,635 மதிப்பிலும்,  கோத்தகிரி அரிமா சங்கம் சார்பில் ரூ. 70,000,  ஜிம்கானா கிளப் சார்பில் ரூ. 5 லட்சம்,  நீலகிரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ரூ.66,000  பேரூராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் ரூ. 1.1 லட்சம்,  கோத்தகிரி பொதுமக்கள் சார்பில் ரூ.1 லட்சத்து 81,855,  பாலகொலா ஓய்வுபெற்றோர் நலச் சங்கம் சார்பில் ரூ.10,000,  டாக்டர் என்.ஜி.ராஜூ  ரூ.25,000,  ரவி ரூ.10,000,  பைகமந்துவைச் சேர்ந்த கேசவமூர்த்தி ரூ.4,000ம்,  தொதநாடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில் ரூ.25,000, பாலகொலா ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.25,000,  தமிழ்நாடு மருத்துவ சவரத் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ரூ.5,000,  ஒருமா ஊட்டி குடியிருப்போர் மலையாள சங்கம் சார்பில் ரூ. 4.2 லட்சம்,  ஒட்டிமர ஒசஹட்டி ஊர் பொதுமக்கள் ரூ.10,700,  டாக்டர் கேசவன் சிவசக்தி மருத்துவமனை சார்பில்  ரூ.20,000,  மேலூர் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.32,050,  கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி சார்பில் ரூ. 3.5 லட்சம்,  கோத்தகிரி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ரூ.25,000 என மொத்தம் ரூ.37 லட்சத்து 59,240 கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலையாக மாவட்ட ஆட்சியர் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
நீலகிரி தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 1,865 கிலோ தேயிலைத்தூள் கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.