விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

குன்னூரில் பராமரிப்பின்றி காணப்படும் பொதுக் கழிப்பிடம் : அம்பேத்கர் நகர் மக்கள் அவதி

குன்னூர் அம்பேத்கர் நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:42 am IST

குன்னூர் அம்பேத்கர் நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 குன்னூர் நகராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கர் நகரில் ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள்  வாழ்ந்து வருகின்றனர்.  இங்குள்ள நகராட்சி பொதுக் கழிப்பிடம் பராமரிப்பின்றிக் கிடக்கிறது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள சாலையில் குடிநீர் வீணாகி வழிந்தோடுகிறது. இது குறித்து நகராட்சி  நிர்வாகத்துக்குப் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தை ஆய்வு செய்து கழிப்பிடத்தைச் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.