அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பனிப் பொழிவால் தேயிலை கொள்முதல் கடும் சரிவு: வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் தேயிலை கொள்முதல் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 5:41 am IST

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் தேயிலை கொள்முதல் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால், 60 சதவீதத் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலையை இழந்துள்ளனர்.
  நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள், 150க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகித்து வருகின்றனர். 
  இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாகக் கடுமையான பனிபொழிவு நிலவுவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள தேயிலைச் செடிகள் கருகிவிட்டன. பனிப் பொழிவால் பசுந்தேயிலை கொள்முதல் படிப்படியாகக் குறைந்துள்ளது. பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளில் தினமும் 30 ஆயிரம் கிலோ பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படும் நிலையில் டிசம்பர் இறுதி வரை அதிகபட்சம், 8,000 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சராசரியாக 2,000 கிலோ பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டது.
   பசுந்தேயிலை கொள்முதல் அளவு இன்னும் சரியக்கூடும் என்பதால் தொழிற்சாலை நிர்வாகங்கள் 60 சதவீதத் தொழிலாளர்களை தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்தியுள்ளன. தனியார் தொழிற்சாலையிலும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. 
   பனியின் தாக்கம் வரும் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாக வேலை இழந்த தேயிலைத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.