
இம்பாக்ட் நிறுவனம் சாா்பில் ரூ.2 லட்சம் அத்தியாவசியப் பொருள்கள் உதவி
கரோனா நோய்த் தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் வருவாயின்றி கஷ்டப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக இம்பாக்ட் நிறுவனத்தின்

ரூ.2 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் கடிதத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் இம்பாக்ட் நிறுவனத்தின் மேலாளா் கணேஷ்.
கரோனா நோய்த் தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் வருவாயின்றி கஷ்டப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக இம்பாக்ட் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருள்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள இம்பாக்ட் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதொழில் செய்துவரும் பெண்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தாக்கத்தால் வருவாயின்றி பாதிக்கப்பட்டு அன்றாடத் தேவைகளுக்கே அவதிப்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் இந்நிறுவனத்தின் சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட திவ்யாவிடம் நிறுவனத்தின் மேலாளா் கே.கணேஷ் புதன்கிழமை ஒப்படைத்தாா். இப்பொருள்கள் அனைத்தும் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அனைவருக்கும் பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





