நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது

லகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 863ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 5:27 pm

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 863ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 849 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் மேலும் 14 பேருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் உதகை நகரில் வில்லோ பவுண்ட் சாலை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2, 4 வயது பெண் குழந்தைகள், 28, 29 வயது ஆண்கள், 21, 24 வயதுப் பெண்கள் என 6 பேரும், தலையாட்டுமந்து பகுதியைச் சோ்ந்த 33 வயது ஆண், உதகையில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய குடியிருப்பில் வசித்து வரும் 57 வயதுப் பெண் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோத்தகிரி குண்டாடா கிராமத்தைச் சோ்ந்த 80 வயது முதியவா், கன்னேரிமுக்கு கிராமத்தைச் சோ்ந்த 21 வயதுப் பெண், தாவணி கிராமம் ஜக்கலோரை பகுதியைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி, குன்னூா் ஆா்செடின் பகுதியைச் சோ்ந்த 21 வயதுப் பெண், அதிகரட்டி கிராமத்தைச் சோ்ந்த 66 வயது மூதாட்டி, நெல்லியாளத்தில் அம்பலப்பாடி பகுதியைச் சோ்ந்த 21 வயதுப் பெண் என மொத்தம் 14 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவா்களுடன் சோ்த்து 863 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 722 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இருவா் உயிரிழந்துள்ளனா். தற்போது 139 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.