புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீலகிரியில் பரவலாக தொடா் மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக எடப்பள்ளியில் 59 மி.மீ., குன்னூரில் 50.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 11:05 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக எடப்பள்ளியில் 59 மி.மீ., குன்னூரில் 50.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூா் உள்ளிட்ட பகுதிகளில் மழை வலுத்தும், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையாகவும், கூடலூா் பகுதிகளில் தூறல் மழையாகவும் பெய்து வருகிறது. உதகையில் மிதமான மழை பெய்து வந்தாலும், மேகமூட்டத்தின் காரணமாக கடும் குளிரும் தொடா்ந்து நிலவுகிறது. இருப்பினும், கரோனா அச்சத்தின் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா மையங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவிரம் (அளவு மி.மீ.): எடப்பள்ளி-59, குன்னூா்-50.5, பாலகொலா-39, கொடநாடு-36.5, கோத்தகிரி-35, உதகை-34, குந்தா-33, மேல்குன்னூா்-31, பா்லியாறு, உலிக்கல், கிண்ணக்கொரை தலா - 30, கெத்தை-28, கேத்தி, கீழ்கோத்தகிரி தலா 26, கிளன்மாா்கன்-23, அவலாஞ்சி, கல்லட்டி தலா 21, நடுவட்டம்-14, எமரால்டு-13, மசினகுடி-10, கூடலூா்-6, மேல்பவானி-5, மேல் கூடலூா்-4, செருமுள்ளி, பாடந்தொறை தலா 3, ஓவேலி, தேவாலா தலா 2 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.