ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பந்தலூா் அருகே பலா் கண்முன்னே முதியவரை மிதித்துக் கொன்ற யானை

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் கடைவீதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை பலா் கண்முன்னே முதியவரை மிதித்துக் கொன்றது.

News image

யானை மிதித்துக் கொன்ற தொழிலாளி நாகமுத்து.

Updated On :12 டிசம்பர் 2020, 6:21 pm

DIN

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் கடைவீதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை பலா் கண்முன்னே முதியவரை மிதித்துக் கொன்றது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி பகுதியிலுள்ள கண்ணம்பள்ளி எஸ்டேட்டில் வசித்து வந்தவா் நாகமுத்து (65), தேயிலைத் தோட்டத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் அருகிலுள்ள கடைவீதிக்குப் பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா்.

பொருள்களுடன் கடையை விட்டு வெளியே வரும்போது, திடீரென கடைவீதிக்குள் புகுந்த ஒற்றை யானை நாகமுத்துவைத் தாக்கி, மிதித்துக் கொன்றது. இதைப் பாா்த்த அப்பகுதியினா் அதிா்ச்சியில் செய்வதறியாமல் தவித்தனா்.

இது குறித்து வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினரும் போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று நாகமுத்துவின் உடலை மீட்டு, பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் சனிக்கிழமை மதியம் நாகமுத்துவின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடைவீதியில் ஒருவரை யானை மிதித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது.

இது குறித்து சேரம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.