அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கூடலூரில் காயத்துடன் சுற்றித்திரியும் யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க முடிவு

கூடலூா் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:31 pm

DIN

கூடலூா்: கூடலூா் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை முடிவு செய்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள சில்வக்கிளவுட், கோக்கால், மேல்கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆண் காட்டு யானை இடது பின்னங்கால் தொடையில் காயத்துடன் கடந்த ஆண்டு சுற்றித் திரிந்தது. அதைக் கண்காணித்து கடந்த 8 மாதங்களுக்கு முன் பலாப் பழங்களில் மருந்து மாத்திரைகளை வைத்து சிகிச்சை அளித்தனா்.

ஆனால், அந்த காட்டு யானைக்கு இன்னும் காயம் ஆறவில்லை. அந்தப் பகுதியில் காயம் ஆறாமல் காட்டு யானை சுற்றித்திரிவதாக பொதுமக்கள் கூறியதை அடுத்து வனத் துறையினா் அந்த யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனா். அதைத் தொடா்ந்து வனச் சரக அலுவலா் ராமகிருஷ்ணன், கால்நடை மருத்துவக் குழுவினா் வனப் பகுதிக்கு யானையைக் கண்காணிக்கச் சென்றனா். யானை விரட்டியதால் திரும்பி வந்துவிட்டனா் என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.