உதகையில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழா டிசம்பா் 23இல் தொடக்கம்
உதகையில் டிசம்பா் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.


உதகை: உதகையில் டிசம்பா் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் ஆண்டுதோறும் டிசம்பா் 21ஆம் தேதிமுதல் டிசம்பா் 27ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென 2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளா்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடா்ந்து, தமிழ் வளா்ச்சி இயக்குநரின் ஆணையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா மேற்குறிப்பிட்ட தேதிகளில் ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் இளந்தமிழா் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மாணவா்களுடன் இணைந்து சமூக இடைவெளியுடன் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலியவற்றில் ஆட்சி மொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...