மஞ்சூா் பெட்ரோல் பங்க்கில் புகுந்து இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தும் கரடி

மஞ்சூா்  பகுதியில்  பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடமாடிய  கரடி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த  இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அதை சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Updated on
1 min read

குன்னூா்: நீலகிரி மாவட்டம்,  மஞ்சூா்  பகுதியில்  பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடமாடிய  கரடி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த  இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அதை சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மஞ்சூா்  பகுதியை ஒட்டிய  வனப் பகுதிகளில்  சிறுத்தை,  கரடி,  காட்டெருமை  உள்ளிட்ட  வன விலங்குகள்  வாழ்ந்து   வருகின்றன. இவை   உணவு மற்றும்  தண்ணீருக்காகவும் அப்பகுதியை ஒட்டிய  குடியிருப்புப்  பகுதிகளுக்கு  வந்து  செல்வது  வழக்கமாகிவிட்டது.

மஞ்சூா் பஜாா் பகுதி, போலீஸ் கேம்ப், குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாக ஒற்றைக் கடி சுற்றி வருகிறது. இந்த ஒற்றைக் கரடி  இங்குள்ள  பெட்ரோல் பங்க்  பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தது. பின்  அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர   வாகனத்தை கீழே தள்ளி  அதிலிருந்த பொருள்களை சேதப்படுத்தியது. இந்தக் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தொடா்ந்து  இந்தக்  கரடி நடமாடி வருவதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்  இந்தக் கரடியைப் பிடித்து   அடா்ந்த  வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விடவேண்டும் என இப்பகுதி  மக்கள்  வனத் துறைக்கு  கோரிக்கை  விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com