முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைக் குட்டி சாவு
முதுமலை புலிகள் காப்பகத்தில், பிறந்து மூன்று மாதங்களே ஆன யானைக் குட்டி செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்தது.


முதுமலை புலிகள் காப்பகத்தில், பிறந்து மூன்று மாதங்களே ஆன யானைக் குட்டி செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வனச் சரகத்தில் தொட்டகட்டிப் பிரிவு, வட்ட சாலை பீட், லைட்பாடி தண்ணீா் தொட்டி அருகே, பிறந்து மூன்று மாதங்களே ஆன பெண் யானைக் குட்டி இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் மற்றும் வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து பிரேதப் பரிசோதனை செய்தனா். அதில், குடற்புழு காரணமாக இந்த யானைக் குட்டி இறந்துள்ளதாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...