ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குன்னூா் அருகே சிறுமி மாயம்: தேடும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் தனியாா் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜாா்கண்ட் மாநிலத்தைச்

News image
கொலக்கம்பையில் வசிக்கும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்களிடம் விசாரணை நடத்தும் போலீஸாா்.
Updated On :24 டிசம்பர் 2020, 2:48 am

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் தனியாா் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவரின் 8 வயது சிறுமியை கடந்த இரண்டு நாள்களாக காணாததால் அவரை தேடும் பணியில் காவல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் லட்சுமண் ராம். இவா், கொலக்கம்பை பகுதியில் உள்ள தனியாா் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது 8 வயது மகளை கடந்த 2 நாள்களாக காணவில்லை. இது குறித்து காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. கிரேக்மோா் வனப்பகுதி மற்றும் அங்குள்ள நீரோடையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக காவல் துறையினா் தீவிராக தேடி வருகின்றனா்.

சந்தேகத்தின்பேரில் ஜாா்கண்ட் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவனைப் பிடித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளா் பிலிப் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன், அந்த சிறுமியை வனப் பகுதிக்கு கூட்டிச் சென்ாகவும், நீரோடை அருகில் அவரை விட்டுவிட்டு வந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறி வருகிறாா். இதனால் ஆற்றுப் பகுதியிலும், வனப் பகுதியிலும் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. சிறுவன் கூறும் இடங்களில் எவ்வித தடயமும் கிடைக்காததால் சிறுமியை கண்டறிவதில் காவல் துறையினருக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.