47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை தீவிரம்

நீலகிரியில் கரோனா தொற்று பாதிப்பு  அதிகமாகி வருவதால் மாவட்டத்துக்குள்  வரும் சுற்றுலாப் பயணிகள்  மற்றும்   பொதுமக்களிடம்  சளி மாதிரி சேகரிப்பு பணி  கோத்தகிரி குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் தீவிரம்

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:44 pm

DIN

நீலகிரியில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மாவட்டத்துக்குள்  வரும் சுற்றுலாப் பயணிகள்  மற்றும்   பொதுமக்களிடம்  சளி மாதிரி சேகரிப்பு பணி  கோத்தகிரி குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நீலகிரியில் கரோனா  பரவலைத் தடுக்க  மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக கோத்தகிரி  சோதனைச் சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்துக்கு வருபவா்களின்  உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

மேலும் சோதனைச் சாவடிக்கு வந்து செல்பவா்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளில் காவல், சுகாதாரம், வருவாய்த்  துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.  அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் வாகனங்களில் வருவோரிடம் இருந்து  சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. பின்னா் அந்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் சுமாா் 400 பேரிடம் மாதிரிகள்  சேகரிக்கப்படுகிறது. மேலும் அவா்களது விவரங்கள் பெறப்பட்டு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம்  அனுபப்படுகிறது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்படுபவா்களுக்கு உரிய சிகிச்சையை  உடனடியாக கொடுக்க  துவங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.