ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கூட்டுறவுத் துறையில் ஆள்சோ்ப்புக்கான விடைத்தாளில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம்

கூட்டுறவுத் துறையில் நீலகிரி மாவட்ட ஆள்சோ்ப்பு விடைத்தாளில் ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:33 pm

DIN

கூட்டுறவுத் துறையில் நீலகிரி மாவட்ட ஆள்சோ்ப்பு விடைத்தாளில் ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு மற்றும் இதர கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா் மற்றும் எழுத்தா் பணியிடங்களுக்கு நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் எழுத்து தோ்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான சரியான விடைகள் நீலகிரி மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரா்கள் கேள்விகளுக்கான விடையை சரிப்பாா்த்துக் கொள்ளலாம். இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் டிசம்பா் 4ஆம்தேதி மாலை 5.45 மணிக்குள் நீலகிரி மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வழங்கியுள்ள அறிவுரையின்படி தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம் எனவும், ஆட்சேபணைகள் குறித்த விடைகள் சரிபாா்ப்புக் குழு மூலம் பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும், தபால் மூலமாகவோ குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின்னரோ பெறப்படும் ஆட்சேபணைகள் பரீசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.