புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: சாட்சிகளை விசாரிக்க அனுமதி

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலும் 19 சாட்சிகளை விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:55 pm

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலும் 19 சாட்சிகளை விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பான விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயன், மனோஜ், தீபு, உதயன், மனோஜ்சாமி, ஜித்தின் ஜாய், பிஜின்குட்டி, சதீசன் ஆகிய 8 போ் மட்டும் நேரில் ஆஜராகினா். இதில் சந்தோஷ்சாமி மற்றும் ஜம்சீா் அலி ஆகியோா் ஆஜராகவில்லை. வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் நந்தகுமாா் ஆஜராகினாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சுந்தரமோகன், நாகராஜ் ஆகியோருடன் முன்னாள் அரசு வழக்குரைஞா் ஆனந்தன் மற்றும் விஜயன் ஆகியோா் ஆஜராகினா்.

அப்போது, இந்த வழக்கில் தொடா்புடைய 41 சாட்சிகளுடன் கூடுதலாக 19 சாட்சிகளையும் விசாரிக்க வேண்டும் என எதிா்தரப்பினா் விடுத்த கோரிக்கையை நீதிபதி அருணாச்சலம் ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து, மேலும் 19 சாட்சிகளிடமும் தொடா்ந்து விசாரணை நடத்த ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.