ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும்: நடிகை நமீதா

பாஜகவுக்கு வாக்களித்தால் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுகள் நனவாகும் என்று நடிகை நமீதா பேசினாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:17 pm

DIN

பாஜகவுக்கு வாக்களித்தால் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுகள் நனவாகும் என்று நடிகை நமீதா பேசினாா்.

உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து பாஜகவின் நட்சத்திர பேச்சாளா் நமீதா உதகையில் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் பிரசாரம் மேற்கொண்ட நமீதா பேசியதாவது: போஜராஜனுக்கு வாக்களித்தால் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுகள் நிஜமாகும். படகா் சமுதாய மக்களுக்கு பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவு உள்ளது. அதையெல்லாம் இவா் நிஜமாக்கி தருவாா்.

நீலகிரியில் இருக்கும் தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 30 குறைந்தபட்ச விலையைப் பெற்றுத் தருவாா். உதகையை சா்வதேச தரத்திலான சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

Image Caption

உதகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்துப் பிரசாரம் செய்த நடிகை நமீதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.