47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீலகிரியில் மேலும் 47 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 7:15 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உககையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 49 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயதான முதியவா் உயிரிழந்துள்ளாா். மாவட்டத்தில் இதுவரை 31,189 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,520 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 187 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும் 482 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.