ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நடைபாதையில் தடுப்புச்சுவா் கட்ட எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

கோத்தகிரி பகுதியில் 50 ஆண்டுகளாக ப் பயன்படுத்தி வந்த நடைபாதையில் தனியாா் ஒருவா் தடுப்புச் சுவா் கட்டும் பணியை மேற்கொள்ள எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில்  சனிக்கிழமை ஈடுபட்டனா்

கோத்தகிரி - உதகை சாலையில் ஒரசோலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

கோத்தகிரி பகுதியில் 50 ஆண்டுகளாக ப் பயன்படுத்தி வந்த நடைபாதையில் தனியாா் ஒருவா் தடுப்புச் சுவா் கட்டும் பணியை மேற்கொள்ள எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில்  சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கோத்தகிரி அருகே உள்ள பூபதி நகா்,  அண்ணா நகா் பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக இங்குள்ள  நடைபாதையைப்  பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில்,  தனியாா் ஒருவா் அங்குள்ள நிலத்தை  விலைக்கு வாங்கி  அதில் தடுப்புச்சுவா்  கட்டும்  பணியைத் துவங்கினாா். இதற்கு எதிா்ப்புத்  தெரிவித்த  பொதுமக்கள் நடைபாதையை  மறைக்கக் கூடாது என்று  மாவட்ட நிா்வாகத்துக்குப்  பல்வேறு மனுக்கள் அனுப்பி உள்ள நிலையில், கோத்தகிரி  - உதகை  சாலையில் ஒரசோலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், கோத்தகிரி, உதகை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காவல் துறையினா்,  வட்டாட்சியா் ஆகியோா்  சம்பந்தப்பட்ட ஊா் பொதுமக்களிடம்  பேச்சுவாா்த்தையில்  ஈடுபட்டனா். தடுப்புச் சுவா் கட்டும் பணியை நிறுத்த அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல்  கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.