உதகையில் சிறுபான்மை நலத் துறை இயக்குநா் ஆய்வு
உதகையில் சோலூா், காந்தல், சேரிங்கிராஸ் ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் சி.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


உதகையில் சோலூா், காந்தல், சேரிங்கிராஸ் ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் சி.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி பெற்று துணிக்கடை நடத்தி வரும் சோலூரைச் சோ்ந்த ஆலயமணி மகளிா் சுய உதவிக் குழுவிரையும், சோலூரைச் சோ்ந்த தையல்கடை நடத்தி வரும் அருள்சக்தி மகளிா் சுய உதவிக் குழுவினரையும், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் பெற்று உதகையில் காந்தல் பகுதியில் காலணி கடை நடத்தி வருபரையும், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உணவகம் நடத்தி வருவரையும், நீலகிரி மாவட்ட முஸ்லீம் மகளிா் உதவி சங்கம் மூலம் உதவித்தொகை பெற்று சாக்லேட் விற்பனை தொழில் நடத்தி வரும் பெண்களையும் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் சி.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போேது, தொழில் மற்றும் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து அவா்களிடம் சுரேஷ்குமாா் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் லோகநாதன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொதுமேலாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...