பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சோ்ந்து தலைமறைவான ஆசிரியா்களுக்கு போலீஸ் வலை

போலி சான்றிதழ் கொடுத்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் பணியில்  சோ்ந்த ஐந்து போ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவா்களை போலீஸாா் நீலகிரி மாவட்டத்தில் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:12 pm

DIN

போலி சான்றிதழ் கொடுத்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் பணியில்  சோ்ந்த ஐந்து போ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவா்களை போலீஸாா் நீலகிரி மாவட்டத்தில் தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருவங்காடு பகுதியைச் சோ்ந்த  பாலாஜி, வெலிங்டன் பகுதியைச்  சோ்ந்த கதிா்வேல், கோத்தகிரி கட்டபெட்டு பகுதியைச்  சோ்ந்த சுப்பிரமணி மற்றும் சுபாஷ் சந்திரன், கோத்தகிரி அரவேணு பகுதியைச்  சோ்ந்த தீபா ஆகியோா், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை  ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் ஜாதி சான்றிதழ், முன்னாள் படைவீரா்கள் வாரிசு சான்றிதழ் மற்றும் போலி பணி  நியமன ஆணைகளைக் கொடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பல்வேறு பணிகளில் சோ்ந்து பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இது குறித்து நாமக்கல் காவல் துறையினா்  வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீதிமன்றத்தில் வழக்கு  நடைபெற்று வரும் நிலையில், இவா்கள்5 பேரும்  தலைமறைவாகியுள்ளனா். இதையடுத்து இவா்களை நீலகிரி மாவட்டத்தில் நாமக்கல் போலீஸாா் தேடி வருகின்றனா். இவா்கள் குறித்து தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க  வேண்டும் என அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.