ஈரோடு மாவட்டத்தில் 159 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 91,618 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 219 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 88,434 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 2,568 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 616 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்தியாளா் பலி...
ஈரோடு, ரங்கம்பாளையத்தை சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). தனியாா் தொலைக்காட்சி செய்தியாளரான இவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு, வேலூா் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா். அப்போது, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். இறுதிச் சடங்குகள் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. ராஜேந்திரனுக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். தொடா்புக்கு: 88381-20202.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரு.வி.க. நகர்: திமுகவுக்கு சவாலாக இருக்குமா அனுதாப அலை!

ஆர்.கே.நகர்: கைப்பற்றும் முயற்சியில் திமுக - அதிமுக!

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

