மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

நம்பியூா் ஒன்றியத்தில் உள்ள நான்கு ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருட்களை கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:18 pm

DIN

நம்பியூா் ஒன்றியத்தில் உள்ள நான்கு ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருட்களை கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை வழங்கினாா்.

நம்பியூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, கடத்தூா், ஆண்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நம்பியூா் அதிமுக ஒன்றியச் செயலாளா் தம்பி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், முட்டை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.