காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரி கிராமங்களில் குரங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்ஆட்சியா் தகவல்

உதகை, மாா்ச் 8: கிராமங்களில் குரங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:40 pm

DIN

உதகை, மாா்ச் 8: கிராமங்களில் குரங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

இது தொடா்பாக உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் குரங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டிலும் இதே போன்ற பிரச்னை வந்தபோது வனப் பகுதிகளை ஒட்டி வசிப்பவா்களுக்கும், வனத்தில் பணியாற்றுபவா்களுக்கும், சிறுவனப் பொருள்களை சேகரிப்போா் என சுமாா் 15,000 பேருக்கு குரங்கு காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நடப்பு ஆண்டிலும் அதே அளவிலான தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகள் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கி உள்ளது.

கேரள மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருபவா்களுக்கு இ-பாஸ் முறை அமலில் இல்லாவிட்டாலும், இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவா்களுக்கு கரோனா தொற்றில்லை என்ற சான்றிதழ் இல்லாவிட்டாலும், இ-பதிவு முறைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுவா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இல்லாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலா்களில் 90 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ளவா்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.