தமிழகத்தில் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் சீமான்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் பாஜகவின் ஊதுகுழலாக சீமான் செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.  
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகி அழகிரி முன்னிலையில் தங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகி அழகிரி முன்னிலையில் தங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் பாஜகவின் ஊதுகுழலாக சீமான் செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 

செக்சன் 17 நிலப்பிரச்னை தொடர்பாக நீலகிரி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கே.எஸ். அழகிரி பேசியதாவது, கூடலூர் செக்சன் 17 நிலப்பிரச்னை தொடர்பாக தற்போது தமிழக அரசும் நீதிமன்றமும் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் வனத்துறை அமைச்சர் ராமசந்திரனும் இப்பிரச்னைக்கு தீர்வு காண ஆர்வமாக உள்ளார்.  

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதை போலவே கூடலூர் செக்சன் 17 நிலப்பிரச்னைக்கும் தீர்வு காணப்படும். தற்போது தமிழகத்தில் நமக்கு சாதகமான ஆட்சியே நடக்கிறது. அதனால் சட்டப்பேரவை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழு அமைத்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக முதல்வரிடம் வழங்கப்படும்.

அதேபோல உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கவும் ஒரு குழு அமைக்கப்படும். இந்தியா என்பது ஒரு நாடல்ல. தமிழ்நாடு என்பதுதான் நாடு. இதைப்போன்ற பல நாடுகள் இணைந்துதான் இந்திய துணைக்கண்டம். காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்கு காவலாய் இருப்பதைப்போல பெரும்பான்மை மக்களுக்கும் துணையாக உள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் பிரிவினையை தூண்டுகிறது. தமிழகத்தில் பாஜகவின் ஊதுகுழலாக சீமான் செயல்படுகிறார்.

சீமானுக்கு கொள்கை என்பதே இல்லை என்றார் அழகிரி. முன்னதாக தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com