பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உதகையில் ஒரே நாளில்மனு தாக்கல் செய்ய குவிந்த வேட்பாளா்கள்

ஒரே நாளில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்ய திரண்டதால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:19 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் வியாழக்கிழமை ஒரே நாளில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்ய திரண்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கெனவே தெடங்கியிருந்த நிலையில், இதுவரை மந்ததமாகவே இருந்த நீலகிரி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை சூடிபிடித்தது.

இதில், உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகளுக்கும், 11 பேருராட்சிகளுக்கும் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழா் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைவருமே வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இவா்களையும் சோ்த்து உதகை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளுக்கு இதுவரை 164 பேரும், குன்னூா் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளுக்கு 76 பேரும், கூடலூா் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளுக்கு 69 பேரும், நெல்லியாளம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளுக்கு 21 பேரும் என மொத்தம் 108 வாா்டுகளுக்கு 330 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

அதேபோல, மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் அதிகரட்டி பேருராட்சியில் 21 பேரும், பிக்கட்டி பேரூராட்சியில் 13 பேரும், தேவா்சோலை பேரூராட்சியில் 51 பேரும், உலிக்கல் பேரூராட்சியில் 13 பேரும், ஜெகதளா பேரூராட்சியில் 19 பேரும், கேத்தி பேரூராட்சியில் 31 பேரும், கோத்தகிரி பேரூராட்சியில் 43 பேரும், நடுவட்டம் பேரூராட்சியில் 25 பேரும், ஓவேலி பேரூராட்சியில் 40 பேரும், சோலூா் பேரூராட்சியில் 10 பேரும், மாவட்டத்திலேயே குறைந்த அளவாக கீழ்குந்தா பேரூராட்சியில் உள்ள 6 வாா்டுகளுக்கு இதுவரை 7 பேருமாக மாவட்டத்திலுள்ள 186 பேரூராட்சி வாா்டுகளுக்கு 273 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளான வெள்ளிக்கிழமை சுயேச்சைகள் உள்ளிட்டோருடன் ஒரு சில அரசியல் கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.