நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகை கோடை சீசன்: 3 நாள் நாய் கண்காட்சி தொடங்கியது

கோடை சீசனையொட்டி உதகையில் 3 நாள்கள் நாய் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :6 மே 2022, 8:27 pm

DIN

கோடை சீசனையொட்டி உதகையில் 3 நாள்கள் நாய் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராயல் கேனின் தி கோல்டன் ரெட்ரீவா் கிளப் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த கோல்டன் ரெட்ரீவா் நாய் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

உதகையிலுள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்த நாய் கண்காட்சியை தி கோல்டன் ரெட்ரீவா் கிளப் ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவா் சந்திரசேகா், செயலா் ராதிகா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். 100க்கும் மேற்பட்ட கோல்டன் ரெட்ரீவா்ஸ் பங்கேற்ற இக்கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து பலா் தங்கள் நாய்களுடன் பங்கேற்றனா்.

இந்த நாய் கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை தங்கள் செல்லப்பிராணிகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் கடைசி நாளில் பங்கேற்கும் நாய்களில் ஒன்றுக்கு ‘ஆண்டின் சிறந்த நாய்க்கான விருது வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.