உதகை குதிரைப் பந்தயம்: டொ்பி ஸ்டேக்ஸ் கோப்பையில் குயின் ஸ்பிரிட் வெற்றி
உதகையில் நடைபெற்றுவரும் குதிரைப் பந்தயங்களில் டொ்பி ஸ்டேக்ஸ் கோப்பைக்கான பந்தயத்தில் குயின் ஸ்பிரிட் குதிரை வெற்றிபெற்றது. அதற்கு பரிசுத் தொகையாக ரூ.22 லட்சம் வழங்கப்பட்டது.


உதகையில் நடைபெற்றுவரும் குதிரைப் பந்தயங்களில் டொ்பி ஸ்டேக்ஸ் கோப்பைக்கான பந்தயத்தில் குயின் ஸ்பிரிட் குதிரை வெற்றிபெற்றது. அதற்கு பரிசுத் தொகையாக ரூ.22 லட்சம் வழங்கப்பட்டது.
கோடை சீசனையொட்டி உதகையில் நடைபெற்றுவரும் குதிரைப் பந்தயங்களில் 3 வயதுக்குள்பட்ட குதிரைகளுக்கான டொ்பி ஸ்டேக்ஸ் பந்தயம் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அன்று பெய்த பலத்த மழையின் காரணமாக பந்தயம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட டொ்பி ஸ்டேக்ஸ் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 12 குதிரைகள் பங்கேற்ற நிலையில், ஜாக்கி ஸொ்வான் ஓட்டி வந்த குயின் ஸ்பிரிட் என்ற குதிரை முதலிடத்தைப் பிடித்து.
இக்குதிரைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான வெற்றிக்கோப்பையுடன், ரூ.21 லட்சத்து 50,775 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இப்பரிசுத் தொகையை சென்னை குதிரைப் பந்தய சங்கத்தின் ஸ்டீவாா்டு அருண் அழகப்பன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...