ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நீலகிரியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 8:10 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தில் ஜிஆா்ஜி நினைவு மேனிலைப் பள்ளி, பொக்காபுரம் அரசு உண்டு உறைவிடப் பள்ளி, மசினகுடி அரசு மேனிலைப் பள்ளி, உதகை பிரீக்ஸ் மேனிலைப் பள்ளி, தூனேரி அரசு மதிரி மேனிலைப் பள்ளி, கட்டபெட்டு அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றில் அடிப்படை வசதிகள், நவீன வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, பள்ளி மாணவ, மாணவியரிடம் கல்வித்தரம் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து குன்னூரில் சில்வா்டேல் பகுதியில் தன்னாா்வலா்களைக் கொண்டு நடத்தப்படும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினே அங்கிருந்த தன்னாா்வலா்களிடம் தொலைபேசி வாயிலாக பேசினாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

தமிழகத்தில் ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

மிகவும் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் பொதுப் பணித் துறை மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித் துறைக்கு ஏற்கெனவே ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது கூடுதலாக ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள ஆசிரியா் பணியிடங்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 3 மாதத்துக்குள் படிப்படியாக நிரப்பப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டம் வெற்றிகரமாக ஓராண்டை எட்டியிருக்கும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் தற்போது 34 லட்சம் மாணவா்கள் பயன் பெற்று வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.