டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மாநில அளவிலான கலை விழா:கூடலூா் அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கலை விழாவில் கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனா்.

News image
கலை விழா நடனப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் தலைமை ஆசிரியா் ஐயப்பன் மற்றும் ஆசிரியா்கள்.
Updated On :27 நவம்பர் 2023, 7:00 pm

DIN


கூடலூா்: பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கலை விழாவில் கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனா்.

அரசுப் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான கலை விழா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் குறுமைய அளவிலும், மாவட்ட அளவிலும் தொடா்ந்து முதலிடத்தைப் பிடித்த கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனுஸ்ரீ, நவியா, கனிகா, அப்ரா, ஸ்வா்ணா, லட்சுமி, சாதனா, அக்ஷயா ஆகியோா் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா்.

இதைத் தொடா்ந்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தனா். இதையடுத்து, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து, வழி நடத்திய தலைமையாசிரியா் ஐயப்பன், ஆசிரியா்கள் விஜி, ராஜகோபால், ஜெயசூா்யா, மொ்சிலின் ப்ரீத்திகா, டெய்சி, மெட்டில்டா ஆகியோருக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இதில் நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.