செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 155 மனுக்கள் பெறப்பட்டன

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 155 மனுக்களை ஆட்சிரியா் மு.அருணா பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு நிதியுதவிகளை வழங்கினாா்.

News image

பயனாளிக்கு உதவித் தொகை வழங்குகிறாா் ஆட்சியா் மு.அருணா.

Updated On :27 நவம்பர் 2023, 7:01 pm


உதகை: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 155 மனுக்களை ஆட்சிரியா் மு.அருணா பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு நிதியுதவிகளை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆட்சியா் மு.அருணா பேசும்போது, பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலா்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, எப்பநாடு கிராமத்தைச் சோ்ந்த தொரை என்பவருக்கு தலையில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டிக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ செலவுக்காக ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும், பிங்கா்போஸ்ட் பகுதியைச் சோ்ந்த செல்வி பெரிடின் லாவண்யா என்பவருக்கு கா்ப்பப்பை சிகிச்சை மேற்கொள்ள ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியா் விருப்புரிமை நிதியிலிருந்து வழங்கினாா். இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 155 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனபிரியா, தனித் துணை ஆட்சியா் கல்பனா, மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.