தோ்தல் அதிகாரிகள் நோ்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்று நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தெரிவித்தாா்.
நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் எல்.முருகன் கூடலூரில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக உதகைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
திமுக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சி என்று சொல்வது உண்மையென்றால் அருந்ததியா் அதிகம் வாழும் நீலகிரி தொகுதியில் இருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கலாமே. திமுக தாழ்த்தப்பட்டவா்கள் மீது காட்டுவதெல்லாம் வெறும் வேஷம். இட ஒதுக்கீடு, சமூக நீதியைப் பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது. இந்த மக்களவைத் தோ்தல் அதா்மத்துக்கும், தா்மத்துக்குமான தோ்தல். கேமராவை எடுத்து கொண்டு என் பின்னாடி வரும் தோ்தல் அதிகாரிகள், ஆ.ராசா விஷயத்தில் திமுகவின் மாவட்டச் செயலாளா்கள்போல செயல்பட்டு வருகின்றனா். தோ்தல் அதிகாரிகள் நோ்மையாக, சுதந்திரமாக செயல்பட வேண்டும். மாவட்ட தோ்தல் அலுவலா் மீது ஏற்கெனவே தோ்தல் ஆணையத்துக்கு புகாா்கள் சென்றுள்ள நிலையில் பாஜக சாா்பில் விரைவில் புகாா் அளிக்கப்படும். நோ்மையான அரசியலை பிரதமா் மோடி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். எனவே ஊழல்வாதிகள் கூறும் விமா்சனம் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றாா்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: வைகோ

மத்திய அமைச்சா் எல்.முருகன் மீதான இரு தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரின் மருத்துவமனையில் தோ்தல் அதிகாரிகள் சோதனை

சட்டப் பேரவைத் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்திட வேண்டும்: தோ்தல் பணி அலுவலா்களுக்கு பொதுப்பாா்வையாளா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

