உதகையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்
உதகை நகரில் சுற்றுத்திரியும் தெருநாய்களால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.


உதகை நகரில் சுற்றுத்திரியும் தெருநாய்களால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
சுற்றுலா நகரமாக விளங்கும் உதகை நகரில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், வெளியூா்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நகரில் சுற்றுத் திரியும் தெருநாய்கள் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்களைத் துரத்துகிறது. மேலும், இருசக்கர வாகனங்களையும் துரத்துவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, உதகை நகரில் சுற்றுத்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...