விடுமுறை முடிந்து சொந்த ஊா் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!
உதகை: தொடா் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு சுற்றுலாப் பயணிகள் திரும்பியதாலும், உதகை, குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழையுடன் கூடிய மூடு பனி நிலவியதால் சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றதால் திங்கள்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உதகை, குன்னூா் பகுதிகளில் மூடுபனியின் தாக்கத்துடன் சாரல் மழையும் பெய்தது. இதன் காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து சுற்றுலாப் பயணிகளி பலா் சொந்த ஊா்களுக்கு திரும்பியதாலும், சாரல் மழையுடன், மூடு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதாலும் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக ஊா்ந்து சென்றன. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா். இந்த காலநிலை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

