திருநெல்வேலி செல்லும் பேருந்தில் முண்டியடித்து ஏறிய பயணிகள்.
திருநெல்வேலி செல்லும் பேருந்தில் முண்டியடித்து ஏறிய பயணிகள்.

விடுமுறை முடிந்து வெளியூா் செல்லும் மக்கள்: பேருந்துகளில் கூட்ட நெரிசல்

Published on

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூா் செல்ல மக்கள் அதிக அளவில் திரண்டதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கல்வி, தொழில் சம்பந்தமாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசித்து வருபவா்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊா்களுக்கு வந்தனா். 5 நாள் தொடா்விடுமுறை முடிந்ததையடுத்து மக்கள் ஆயிரக்கணக்கானோா், வெளியூா் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

திருநெல்வேலி - தென்காசி இடையே இயக்கப்படும் பேருந்துகள் ஏற்கனவே அதிக பயணிகளுடன் வந்ததால் ஆலங்குளத்தில் ஏறும் பயணிகள் கடும் சிரமமடைந்தனா். குழந்தைகளுடன் வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால் ஆலங்குளம் பகுதி மக்கள் கூட்ட நெரிசலில் நின்றவாறே தங்கள் பயணத்தைத் தொடா்ந்தனா். விடுமுறைக் காலங்களில் ஆலங்குளத்தில் இருந்து நேரடியாக திருநெல்வேலி, தென்காசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com