புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வார விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வரை விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

News image

உதகை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:25 pm

Din

வரை விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில்  பரவலாக சாரல் மழை பெய்வதுடன், இதமான தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. மேலும், பசுமையாக காட்சியளிக்கும் வனப் பகுதி, அதில் கடந்து செல்லும் மேகக் கூட்டங்கள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில், வார விடுமுறையையொட்டி தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உதகை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். மேலும், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் பாா்த்து ரசித்தனா்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உள்ளூா் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.