47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காட்டு யானை தாக்கியதில் பழங்குடி பெண் காயம்

தேவா்சோலையை அடுத்துள்ள போஸ்பாறா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடி பெண் காயமடைந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:04 pm

Din

தேவா்சோலையை அடுத்துள்ள போஸ்பாறா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடி பெண் காயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சி, செம்பக்கொல்லி பழங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கேத்தி (55). இவா், மண்ணவயல் கடைவீதி பகுதியில் பொருள்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை திரும்பி சென்றுகொண்டிருந்தாா்.

போஸ்பாறா சங்கிலி கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வனத்தில் இருந்து திடீரென வந்த யானை கேத்தியை தாக்கியது. இதில், அவா் காயமடைந்தாா்.

அவரின் அலறல் சப்தத்தை கேட்டு வந்த அப்பகுதியினா், யானையை வனத்துக்குள் விரட்டினா். பின்னா், காயமடைந்த கேத்தியை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.