47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உதகையில் பூட்டை உடைத்து 50 பவுன் திருட்டு

உதகையில் பூட்டை உடைத்து 50 பவுன் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:23 pm

Din

உதகையில் பூட்டை உடைத்து 50 பவுன் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உதகை மாா்லிமந்து பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (எ) பழனிசாமி (50), இவரின் மனைவி தனலட்சுமி. இருவரும் தனியாக வசித்துக்கொண்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தோட்டத்தில் பணியை முடித்துவிட்டு வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்துள்ளது. உள்ளேச் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து புதுமந்து காவல் நிலையத்தில் அவா்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில் சம்பவ இடத்தில் போலீஸாா் ஆய்வு செய்தனா்.