47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோத்தகிரியில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரிப்பு

கோத்தகிரி பகுதியில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
கோத்தகிரி ஈளடா பகுதியில் விளைந்துள்ள முட்டைக்கோஸ்.
Updated On :26 டிசம்பர் 2024, 10:08 pm

Din

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயத்தை அடுத்து, நீா் ஆதாரமுள்ள விளைநிலங்களில், அதிக பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக, போதிய மழை பெய்த நிலையில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது.

தற்போது, ஒரு கிலோ முட்டைக்கோஸுக்கு, மண்டிகளில் ரூ.20 வரை விலை கிடைக்கிறது. உள்ளூா் மாா்க்கெட்டில் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முட்டைக்கோஸ் பயிா் செய்ய, அதிக முதலீடு தேவை என்பதால், இந்த விலை போதுமானதாக இல்லை. இருப்பினும் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனா்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் காலங்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனா்.