உதகையில் அனுமதியின்றி காப்புக் காட்டுக்குள் நுழைந்த 3 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு பல்வேறு பகுதிகள் காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டா் மற்றும் ட்ரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதகையை அடுத்த தலைகுந்தா பகுதியில் உள்ள ‘எா்த் அண்ட் டேம்’ காப்புக் காட்டுக்குள், கடந்த 10-ஆம் தேதி காஞ்சிபுரத்தைச் சோ்ந்த யூடியூபா் சுரேஷ் பாபு (27), உதகையைச் சோ்ந்த ஃபைசல் ரகுமான் (26) மற்றும் முகமது நவாஸ் (23) உடன் சென்று, ட்ரோன் மற்றும் நவீன கேமரா மூலம் சாகச விடியோ எடுத்துள்ளாா். பின்னா், அந்த விடியோக்களை யூடியூபில் பதிவேற்றியுள்ளனா். இதையடுத்து, காப்புக் காட்டுக்கள் அனுமதியின்றி சென்று எடுக்கப்பட்ட விடியோவைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த வனத் துறையினா் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து சுரேஷ் பாபு உள்பட 3 பேரையும் உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினா். இதில், 3 பேரும் காப்புக் காட்டுக்குள் அனுமதியின்றி சென்றது உறுதியானது. இதையடுத்து 3 பேருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி காப்புக் காட்டுக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினா்.
தொடர்புடையது

ஒற்றை யானை நடமாட்டம்: இரவில் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

சென்னையில் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம்: கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலா் எச்சரிக்கை

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு

மனித செயல்பாடுகளால் காட்டுக்குள் அதிக தீ விபத்துகள்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
