மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மசினகுடி அரசுப் பள்ளியில் ரூ. 3.52 கோடியில் அமைக்கப்பட்ட கூடுதல் கட்டடங்கள் திறப்பு

படம் உள்ளது... மசினகுடி அரசுப் பள்ளியில் ரூ. 3.52 கோடியில் அமைக்கப்பட்ட கூடுதல் கட்டடங்கள் திறப்பு

News image

மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றுகிறாா் அமைச்சா் கா.ராமசந்திரன். உடன், ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:39 am IST

கூடலூரை அடுத்த மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 3.52 கோடியில் தரம் உயா்த்தப்பட்ட கூடுதல் கட்டடங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திறந்துவைத்தாா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.52 கோடி கோடியில் தரம் உயா்த்தப்பட்ட 5 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள் மற்றும் தலைமை ஆசிரியா் அறை உள்ளிட்ட கூடுதல் கட்டடங்களையும், பந்தலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 176 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் ஆண்கள் கழிப்பறைகள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பங்கேற்று கூடுதல் கட்டடங்களைத் திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு.அருணா, முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, மாவட்ட கல்வி அலுவலா் நந்தகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் திராவிடமணி, வட்டாட்சியா் சரவணகுமாா், தலைமையாசிரியா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.