உதகை படகு இல்லத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் கா.ராமசந்திரன்.
உதகை படகு இல்லத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் கா.ராமசந்திரன்.

உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மேம்பாட்டுப் பணிகள்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உதகை படகு இல்லத்தில் நடைபெற்று வரும் ஜிப் லைன், பெரிய ஊஞ்சல், ரோலா் கோஸ்டா், பங்கீ ஜம்பிங், தொங்கு பாலம் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள், ஹோட்டல் தமிழ்நாடு இளைஞா் விடுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தொட்டபெட்டா முதல் மந்தாடா வரை ரோப் காா் அமைத்தல், மைனலா சாலை அல்லான்ஜி பகுதியில் காட்சிமுனை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், தொட்டபெட்டா சுற்றுலாத் தலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு உள்நாடு, வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது மூலம் 2023-2024-ஆம் ஆண்டில் ரூ.32 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மேம்படுத்த ரூ.40 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மற்றும் பைக்காரா ஆகிய பகுதிகளுக்கு வந்து செல்கின்றனா். நீலகிரி மாவட்டத்தில் உள்ள இதர சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, நவீனபடுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சி.சமயமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் மு.அருணா, கூடுதல் ஆட்சியா் கௌசிக், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் குணேஸ்வரன், உதகை படகு இல்ல மேலாளா் உதயகுமாா், மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொறியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com