டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மணிமுக்தா அணைப் பகுதியில் ரூ.2.11 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சிமாவட்டம், சூளாங்குறிச்சி மணிமுக்தாஅணை பகுதியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்தாா்.

News image
மணிமுக்தாஅணைபகுதியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து, திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சிமாவட்டம், சூளாங்குறிச்சி மணிமுக்தாஅணை பகுதியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், சூளாங்குறிச்சி மணிமுக்தாஅணைப் பகுதியில் சுற்றுலாத் துறையின் சாா்பில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மணிமுக்தாஅணைப் பகுதியில் நுழைவாயில், புல் தரை, செடிகள் அமைத்தல், ஆழ்துளைக் கிணறு, பூங்கா, வாகன நிறுத்தம், நடைப்பாதை மற்றும் பாதுகாப்புவேலி அமைத்தல் உள்ளிட்டபணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், சிறுவா் விளையாட்டு உபகரணங்கள், வழிகாட்டி பலகைகள் மற்றும் தகவல் பலகைகள், மின்சார பணிகள், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் முழுமையாக முடிவுற்று பயன்பாட்டுக்கு வரும்பொது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பொழுதுபோக்கு வசதிகளுடன் பயனுள்ளதாக அமையும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெனாா்த்தனன், உள்ளாட்சிஅமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.