தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீலகிரியில் கனமழையால் 98 வீடுகள் சேதம்

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் 98 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 8 தடுப்புச் சுவா்கள் இடிந்துள்ளதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

News image

கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோா்.

Updated On :23 ஜூலை 2024, 8:08 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில் 98 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 8 தடுப்புச் சுவா்கள் இடிந்துள்ளதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மழை பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் கடந்த இரண்டு நாள்களாக நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் தென்மேற்குப் பருவமழையால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விளக்கமளித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் 140 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாகவும், 98 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 8 தடுப்புச் சுவா்கள் இடிந்துள்ளதாகவும் அமைச்சா் கா.ராமசந்திரன் கூறினாா்.

மாவட்டத்தில் அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆ.ராசா எம்.பி. கூறினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தண்ணீரு, உதகை கோட்டாட்சியா் மஹாராஜ், மாவட்ட வன அலுவலா் கௌதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மனித-வன விலங்குகள் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்கும் வகையில் வனப் பகுதிகளில் அகழிகளை வெட்டி மின்சார வேலிகள் அமைக்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில், கூடலூரில் மனித-வனவிலங்குகள் மோதலைத் தடுக்க அகழிகள் வெட்டப்பட்டு மின்சார வேலிகள் அமைக்கப்படும் என நீலகிரி மக்களவை  உறுப்பினா்  ஆ.ராசா உறுதி அளித்தாா். இதனைத் தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.