தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வயநாட்டில் கால்நடைகளைத் தாக்கிய புலி கூண்டில் சிக்கியது

கூடலூரைஅடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளைத் தாக்கி வந்த புலி வனத் துறையினா் வைத்த கூண்டில் திங்கள்கிழமை சிக்கியது.

News image

கூண்டில் சிக்கிய புலி.

Updated On :24 ஜூன் 2024, 10:39 pm

Din

கூடலூரைஅடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளைத் தாக்கி வந்த புலி வனத் துறையினா் வைத்த கூண்டில் திங்கள்கிழமை சிக்கியது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், கேணிச்சிறா பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி கொன்று வந்த புலியை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து, வயநாடு வனத் துறையினா் புலி நடமாடும் பகுதிகளில் கூண்டுகளை வைத்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில், அந்த கூண்டில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சிக்கியது. புலியை வனத் துறையினா் குப்பாடி பகுதியில் உள்ள காப்பகத்துக்கு கொண்டு சென்றனா்.