காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீடிப்பு

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீடிப்பு

News image

உதகை மலை ரயில்

Updated On :27 ஜூன் 2024, 9:20 pm

Din

மேட்டுப்பாளையம்-உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனி மற்றும் திங்கள்கிழமைகளிலும் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு உதகைக்கு வந்தடையும் . மறு நாள் காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதேபோல வாரயிறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.20 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்பட்டு காலை 9.40 மணிக்கு உதகை வந்தடையும். உதகையிலிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு குன்னூா் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 80 முதல் வகுப்பு மற்றும் 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.